மட்டக்களப்பில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது , ஹர்த்தாலையும் மீறி அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும்
அத்துடன், வீதிகளில் டயர்களும் எரிக்கப்பட்ட. குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமைய தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை பொலிஸ் நியைத்துக்கு விசாரணைக்கு வருமாறு பொலிஸார் தெரிவித்த நிலையில் க.மோன்; இன்றைய தினம் பகல் 12.30 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற போது அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

