நாட்டில் நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 300 நீர் பவுசர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலையினால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறு நீரின்றி இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே இவ்வாறு நீர் விநியோகிக்கப்படுவதாகவும், வழங்கப்படும் நீரை சிக்கனமாக பாவிக்குமறும் இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் வறட்சி காரணமாக வனப் பகுதிகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகளையும் தவிர்த்துக் கொள்ளுமறும் அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி கேட்டுக் கொண்டுள்ளார்.

