வவுனியா மோட்டார் சைக்கில் விபத்து

353 0

வவுனியா கூமாங்குளம் சதோச சந்தியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது வவுனியா நகரிலிருந்து கூமாங்குளம் நோக்கி பியர் போத்தலை ஏற்றிக்கொண்டு சென்ற மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்ததுடன் பியர் போத்தல்களும் வீதியில் சிதறிக்கிடந்தன.

Leave a comment