மஸ்கெலியா காட்மோர் பகுதியில் உள்ள ஆ
று ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை மஸ்கெலியா பொலிஸார் மீட்டுள்ளனர்.காட்மோர் தம்பத்தனை பகுதியைச் சேர்ந்த காலிமுத்து விஜயலக்ஷமி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலத்தை இன்று காலை 11 மணியளவில் மீட்டுள்ள பொலிஸார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

