புளியங்குளம் பகுதியில் இளம் ஜோடி சடலமாக மீட்பு

289 0

வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய வீடமைப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டினால் வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றில் இருந்து இன்று மாலை 25 மற்றும் 19 வயதுடைய இளம் ஜோடி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சம்பவம் தற்கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment