வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் பணி ஆரம்பம், நவம்பர் 8 சபையில்- நிதி அமைச்சு

324 0

நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய ஆண்டுக்கான (2019) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்பின்னர், நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையில் இது தொடர்பான விவாதம் நடாத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் தயாரிப்புக்கான பொது மக்களினதும், புத்திஜீவிகளினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை நிதி அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment