விபத்தில் சமூர்த்தி அதிகாரி ஒருவர் பலி

410 0

ஹம்பாந்தோட்டை, பல்லேமலல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

அம்பலந்தொட்டை, சித்திரகல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சமூர்த்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment