யுக்ரெய்னுடன் இலங்கை முக்கிய உடன்படிக்கையில் கைச்சாத்து

507 0

16col2249851162249979_4057584_04032016_sss_cmyயுக்ரெய்னின் வெளியுறவு அமைச்சர் பவ்லோ க்ளிம்கின் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் குற்றங்கள் தொடர்பிலான சட்டஉதவி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும்  கைதிகள் ஆகியோர் இரண்டு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மங்கள சமரவீர, யுக்ரெய்ன்னுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையில் இந்த உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையால் தேடப்படும் மஹிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவும் யுக்ரெய்னிலேயே தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment