இலங்கையின் துறைமுகங்கள் நட்டத்தில் – புதிதாக இரண்டு கப்பல்கள் கொள்வனவு

6246 0

a060d-ins2bastradhariniசர்வதேச சரக்குபோக்குவரத்து சந்தை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளது
இலங்கையின் இணையம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
எம்வி சிலோன் பிரின்சஸ் என்ற இந்தக்கப்பல் 7.5மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடமும் சிலோன் ப்ரீஸ் என்ற கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு கப்பல்களுக்கும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் 35 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளது.
இவையாவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் செலுத்தப்பட்ட தொகை என்று இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கப்பல் கொள்வனவு உடன்படிக்கை என்பதால் தற்போதைய அரசாங்கத்துக்கு இந்த உடன்படிக்கையை ரத்துச்செய்யமுடியவில்லை.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளநிலையில் கொழும்பு துறைமுகமும் நிதியோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய கப்பல்களின் கொள்வனவு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment