நல்லூரில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

3653 12

நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் இருந்த எரிவாயு கொள்கலன் திடீரென இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை மூன்று மணியளவில் வெடித்து சிதறியது. இதன்போதே குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் ஆலய சூழலில் முதலுதவி செயற்பாடுகளுக்காக தரித்து நின்ற நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a comment