பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மனிஸா நியமனம்!

212 0

வெற்றிடமாகியிருந்த பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு, மனிஸா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது,  தென்கொரியாவுக்கான, இலங்கைத் தூதுவராக பதவி வகித்து வரும் நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய இலண்டனுக்கு தொழில் இராஜதந்திரியொருவர் நியமிக்கப்பட வேண்டும்  என்ற நிலைப்பாட்டின் பயனாக, 2008ஆம் ஆண்டின் பின்னர், முதற் தடவையாக, இவ்வாறானதொரு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment