தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

7807 55

தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம், கந்தர்மடம் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று மாலை, யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், கந்தர்மடச் சந்திக்கு அருகாமையில், தமிழ் மக்கள் பேரவை அலுவலகம், விருந்தினர்களால் மக்கள விளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து,இந்து, கிறிஸ்தவ மத குருமார்களின் ஆசிர்வாதம் இடம்பெற்று, வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் பேரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்தின், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வைத்தியக்கலாநிதி பூ.லக்ஸ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment