“நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம்” – கமல் பேட்டி!

338 0

அடுத்தாண்டு  நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தெரிவித்துள்ளார்.மேலும், ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

 

நடிகர் கமல்ஹாசன் `மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை துவக்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியை பலப்படுத்தும், பல்வேறு செயல்களை அவர், மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மதுரையில், நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் கமல். அப்போது, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம். எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை. மேலும், தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

Leave a comment