மாலியில் பிரான்ஸ் படை தாக்குதல் – பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பலி!

225 0

மாலியில் பிரான்ஸ் படை தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் சகாரா குழுவின் மூத்த தலைவர் முகமது அக் அல்மவுனர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன், உலகமெங்கும் கால் பதித்தது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான மாலியிலும் அந்த அமைப்பு கால் பதித்து இருந்தது. குறிப்பாக அந்த அமைப்பின் சகாரா குழுவினர், மாலியில் புர்கினா பாசோ எல்லையில் உள்ளனர். அவர்களை குறிவைத்து பிரான்ஸ் படையினர் வான்தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் சகாரா குழுவின் மூத்த தலைவர் முகமது அக் அல்மவுனர் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாவலரும் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.அத்துடன் மற்றொரு ஐ.எஸ். பயங்கரவாதி படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்து உள்ளது.

இது தொடர்பாக பாரீசில் வெளியான அறிக்கையில், “வான்தாக்குதலில் முகமது அக் அல்மவுனர், அவரது பாதுகாவலர்களில் ஒருவர், ஒரு பெண், ஒரு வாலிபர் என 4 பேர் உயிரிழந்தனர். இதை அங்கு பணி அமர்த்தப்பட்டிருந்த கமாண்டோ படையினர் உறுதி செய்து உள்ளனர்” என கூறப்பட்டு உள்ளது.இந்த வான் தாக்குதலில் ‘மிரேஜ்-2000’ விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a comment