ஜப்பானிய வெளியுறவு ராஜாங்க அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

319 0
ஜப்பானின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் காசுயுல்சி நகானே இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில், அவரது விஜயம் அமைகிறது.

இன்று முதல் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் அவர், பிரதமர் மற்றும் அரசாங்கத் தரப்பு அதிகாரிகள் பலவரையும் சந்திக்கவுள்ளார்.

ஜப்பானின் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு கண்காணிப்பு படகுகளை வழங்கியுள்ளது.

இந்த படகுகள் நாளைய தினம் ஜப்பானிய ராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளன

Leave a comment