நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை-மனோ

10385 0

நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை. ஆனால் அந்த அதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்டிக்கழிக்க முடியாது என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம்  மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில்  கிளி. மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளை சந்திந்த  போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர்  மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை. ஆனால் அதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்டிக்கழிக்க முடியாது. கூட்டமைப்பு அதிகார பகிர்வை கோருகிறது எமது கூட்டணியும் அதிகார பகிர்வை கோருகிறது. ஆனால் வேறுபாடு என்னவெனில் நாங்கள்   மக்களுக்கு மிகவும் தேவையான பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொண்டு  அதிகார பகிர்வை கோருகின்றோம். ஆனால் கூட்டமைப்பின் நிலைப்பாடு அவ்வாறானதல்ல.

தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தலைவர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கவில்லை அவர்கள் உள்ளே வந்த பதவிகளை  பெற்று தங்கள் மக்களுக்கு  சேவையாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறே  மலையகத்திலும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் துரதிஷ்ட்டவசமாக வடகிழக்கு மக்கள் பிரதிநிதிகள் அரசியல் தீர்வை பெறுவதற்காக அதுவரைக்கும் பொருளாதார தீர்வை பெறுவதனை ஒத்திவைத்துள்ளார்கள். அரசியல் தீர்வு வரும் போது  வரும் அதனை வர வைப்போம் ஆனால் அதுவரை பொறுத்திருக்காது வாழ்வாதார உதவிகளை, உட்கட்டமைப்பு வசதிகளை வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a comment