மைத்திரியின் பணியாளர் ஹோட்டலி மர்ம மரணம்!

10481 202

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஹோட்டலின் இரண்டாவது மாடியின் 11 வது அறையில் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் தனது பணி நிறைவடைந்த பின்னர் உறங்க சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது அறைக்கு சென்று பார்க்கும் போது, அவர் எழுந்திருக்கவில்லை என்பதனால் பொலிஸாரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து சோதனையிட்ட போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

ஓபாத்த பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான தயந்த தர்மசிறி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்காக காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a comment