தேர்தலை விருப்பு வாக்கு முறைமையில் நடத்த அனுமதிக்க முடியாது-பைஸர் முஸ்தபா

252 0

நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலை விருப்பு வாக்கு முறைமையில் நடத்த அனுமதிக்க முடியாது என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

வாக்கெடுப்பின் நிறைவில், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றில் ஏகமனதாக அங்கீகரிக்கப்படவில்லை. வாக்கெடுப்பின் போது, ஆதரவாக எவ்வித வாக்குகளும் அளிக்கப்படாத நிலையில், எதிராக 139 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பின் போது, ஶ்ரீலங்கா சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment