வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனினால் கனகாராஜன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுவரும் சமுர்த்தி மாதிரிக்கிராமத்தின் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய பல மில்லியன் ரூபா சரியாக முறையில் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளதானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது அத்துடன் ஆதாரமற்ற செய்தி என பெரியகுளம் கிராம அபிவிருத்திச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் வடமாகாணசபை உறுப்பினர்    ஜி. ரி. லிங்கநாதன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 55க்கு மேற்பட்ட குற்றச்சாட்டினை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சமர்ப்பித்துள்ளதாகவும் அதில் கனகராஜன்குளம் பெரியகுளம் கிராமத்திற்கு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் வழங்கப்பட்ட சமுர்த்தி மாதிரிக்கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா நிதி மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

எனவே இக்குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது அத்துடன் சமுர்த்தி மாதிரிக்கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சரியாக முறையில் இடம்பெற்று வருகின்றது சில வேலைத்திட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

இவ்வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பூரண கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றது. அதற்கான வேலைத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதிகள் பெறப்பட்டுள்ளது என்பது சகல கணக்கு ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கின்றோம்.

சமுர்த்தி மாதிரிக்கிராமத்திற்கான வேலைத்திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுற இருக்கின்றது எனவே வடமாகாண சபை உறுப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு எமது கிராமமான பெரியகுளம் கிராமத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானதாகவே காணப்படுகின்றது. என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.