இன்று வடக்கில் முதலாவது காகித உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா!

41545 0

யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக “அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை” இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நோபிள் நிறுவனத்தின் பணிப்பாளர் குருசாமி ஸ்ரீதரின் அயராத முயற்சியினால் வடக்கின் முதலாவது காகித உற்பத்தித் தொழிற்சாலையாக இந்த ஆலை இன்று (22) உதயமாகியுள்ளது.

ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் நிறுவன முதல்வர் கந்தையா பாஸ்கரன் அவர்களின் நிதி அனுசரணையில் குறித்த இந்த ஆலை மீண்டெழுந்துள்ளது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக USAID நிறுவனத்தின் சார்பில் எலிஸபெத் டாவேர்ன், லான்ட் ஓ லீக்ஸ் அமைப்பின் சார்பில் மைக்கேல் பார், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கழிவுக் கடதாசிகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும்  இவ் ஆலையால் வடக்கில் பலர் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதுடன் தமிழர் தாயகத்தின் தன்நிறைவு பொருளாதாரத்திற்கும் வழிகாட்டி நிற்கின்றது.

 

Leave a comment