இத்தாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி!

236 0

கனமழை காரணமாக இத்தாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி நாட்டின் கேலாப்ரியா மாகாணத்தில் பொலினோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் ஒருபகுதியக ராக்னெல்லோ எனும் ஓடை உள்ளது. மலை இடுக்குளில் மிகவும் குறுகலாக சுமார் 1 கி.மீ அழத்தில் பயணிக்க கூடிய இந்த நீர் ஓடையை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஓடைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த ஓடையை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 18 பேர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் அவர்களில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் யாரும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இப்பகுதிக்கு சென்றுள்ளதால் மொத்தம் எத்தனை பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இத்தாலியில், கடந்த வாரம் பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment