அமெரிக்க விமானத்தை அவசரமாக தரையிறக்கிய காபி மேக்கர்

326 0

201609191115271110_faulty-coffee-machine-forces-lufthansa-emergency-landing_secvpfநடுவானில் பறந்த அமெரிக்க விமானத்தை காபி மேக்கர் கருவி அவசரமாக தரை இறக்க செய்தது.அமெரிக்காவில் விர்ஜினியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முனீச் நகருக்கு லுப்தான்சா நிறுவன விமானம் புறப்பட்டு சென்றது அதில் 223 பயணிகள் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்து புகையுடன் ஒருவித வாசனை வெளிவந்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஏதோ எரிவது போன்ற வாசனை வருவதாக விமான ஊழியர்களிடம் புகார் செய்தனர்.

உடனே இது குறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து விமானத்தை தரை இறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து புறப்பட்ட 70 நிமிடத்தில் பாஸ்டன் நகரில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதையடுத்து விமானத்தை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது விமானத்தில் இருந்த பழுதடைந்த காபி மேக்கரில் இருந்து புகை வெளி வந்ததால், தீ எரிவது போன்ற வாசனை வெளியானது தெரியவந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.