வெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் – போப் வலியுறுத்தல்

203 0

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணையாக நின்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணையாக நின்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், கனமழை காரணமாக கேரளா மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. மழையில் சிக்கியும், நிலச்சரிவாலும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கேரளா மாநிலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள சகோதர, சகோதரிகளுக்கு சர்வதேச சமுதாயம் உறுதுணையாக நிற்க வேண்டும். அங்கு தேவைப்படும் அனைத்து உதவிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment