யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இரகசிய தகவல்களை கேட்கும் பொலிஸார்

7 0

அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் இரகசிய தகவல்களை தொலைபேசி ஊடாகவும் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (17) யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களிற்கு உட்பட்ட பிரதேசங்களில், பொலிஸாரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் 5 ஆயிரம் பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொது மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அதேநேரம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம், விநியோகம் செய்யப்படவுள்ளன.

எனவே, குறிப்பிட்ட பொலிஸ் நிலையப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள், மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த தகவல் அறிந்த பொது மக்கள் தொலைபேசி மூலமும், வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகவரிக்கும் தனிப்பட்ட முறையில், தகவல் தெரிவிக்குமாறும் கூறினார்.

இரகசியமாக தகவல்களை வழங்கினால், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த இலகுவாக இருக்குமென்றும், இவ்வாறான தகவல்களை தந்துதவுமாறும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

சமஷ்டி என்­ற­வுடன் அது பிரி­வினை என்று சிங்­கள மக்கள் மனதில் பயத்­தையும் பீதி­யையும் நிலை நாட்­டி­யுள்­ளார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள்!

Posted by - July 30, 2018 0
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார்.    தமிழ் மக்கள் போரின் பின்னர்…

விலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)

Posted by - November 2, 2018 0
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண பிராந்திய பிரதியமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேநேரம் எஸ்.பி நாவின்ன கலாசார…

யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மாபெரும் பேரணி

Posted by - March 16, 2019 0
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - November 9, 2016 0
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published.