தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விஸ ஊசி பரிசோதனைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வட மாகாண சுகாதார சபை தெரிவித்துள்ளது.
பிரதேச சுகாதார வைத்திய அலுவலகங்கள் ஊடாக இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த மருத்துவ அறிக்கையினை பெறுதற்கு அதிகமான புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகள் தயக்கம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை பல உறுப்பினர்களிடம் குறித்த முதற்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள போதிலும், ஏனைய பரிசோதனைகள் செய்ய இவர்கள் விருப்பத்துடன் இல்லை எனவும் வடமாகாண சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் இந்த பரிசோதனை நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

