தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை ரூ.18 ஆயிரம் கோடி கையாடல்

238 0

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடியை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்.

சுப்ரீம் கோர்ட்டில், எம்.எல்.சர்மா என்ற வக்கீல், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில், எஸ்.சி., எஸ்.டி. சமூக மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடியை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரையிலான கணக்குகளை தணிக்கை செய்த இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி இதை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை அவசர மனுவாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வக்கீல் எம்.எல்.சர்மா நேற்று வலியுறுத்தினார். அடுத்த வாரம் இம்மனுவை விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்தனர்.

Leave a comment