இரத்தினபுரி நீதிமன்றத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதி கைது

4705 22

இரத்தினபுரி மேலதிக நீதவான் நீதிமன்றத்திலிருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.27 வயதுடைய குறித்த சிறைக்கைதி நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் தப்பிச்சென்றுள்ளார்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் கஹவத்த, தெமடக்கெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment