ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து நடவடிக்கை

297 0

201609180847430991_eastern-european-referendum-results-and-brexit-polls-as-uk_secvpfஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து நடவடிக்கை எப்போது தொடங்கும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூன் மாதம் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் டேவிட்ட கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்.

இந்த நிலையில், கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டொனால்டு டஸ்க், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான நடவடிக்கையை இங்கிலாந்து மேற்கொள்ளும் என தெரசா மே என்னிடம் தெரிவித்தார் என கூறினார்.

இதுபற்றி தெரசா மே அலுவலகம் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை இங்கிலாந்து இந்த ஆண்டு தொடங்காது என உறுதிபட தெரிவித்தது. அதே நேரத்தில் டொனால்டு டஸ்க் கூற்று பற்றி எதையும் உறுதி செய்யவில்லை.