கூட்டு எதிர்க்கட்சியினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்றால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (13) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தே வெற்றி பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி செயற்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

