புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, புகையிரத திணைக்களத்துக்கு மட்டுமன்றி, இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 10 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்கள், ரயில் பருவச்சீட்டுகளை வைத்திருந்த ரயில் பயணிகள், இ.போ.ச.வுக்கு சொந்தமான பஸ்களில், இலவசமாக ஏற்றிச்செல்லப்பட்டனர்.
அதுமட்டுமன்றி, நாளொன்றுக்கு 80 ஆயிரம் கிலோமீற்றர் தூரம், மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால், இ.போ.சவுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

