இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும்!

287 0

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அவதானம் செலுத்தும் போது, அவை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகளை முன்கொண்டு செல்வதற்கு பல நிதி சார்ந்த தடைகள் நிலவுகின்றன. இதன் காரணமாகவே இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு நிதியாக 100 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment