தோப்பூர் பகுதியில் வாகன விபத்தில் சிக்கி சிறுமி பலி

337 0

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (11) மாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கரி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம், குறித்த சிறுமி மீது மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பைஸர் பாத்திமா நுஹா எனும் 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்பில் வாகனச் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment