மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் நெல்லை மாவட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் மலைப்பகுதியில் இன்று காலை வரை 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 3,140 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் நேற்றை விட 2 அடி உயர்ந்து இன்று 116.40 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.44 அடியாக இருந்தது. அது இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 137.96 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 111 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று அணை நீர் மட்டம் 70.90 அடியாக உள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 128.25 அடியாக இருந்தது. இன்று மேலும் 2 அடி உயர்ந்து முழுகொள்ளளவை அடைந்து 131 அடியாக உள்ளது. கடனாநதியில் முழுகொள்ளளவான 83.50 அடியில் நீர்மட்டம் உள்ளது. ராமநதியில் 79.25 அடியும், கருப்பாநதியில் 67.26 அடியும், கொடுமுடியாறு அணையில் 42 அடியும் நீர்மட்டம் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
குண்டாறு – 40
செங்கோட்டை – 21
அடவிநயினார் – 20
பாபநாசம் – 13
தென்காசி – 9
சிவகிரி – 7
ஆய்குடி – 5.4
சேர்வலாறு – 5
கடனாநதி – 5
ராமநதி – 5
மணிமுத்தாறு -2.4

