சவுதி கூட்டுப்படை தாக்குதல் – குழந்தைகள் பலியானது குறித்து விசாரணை நடத்த ஐநா வலியுறுத்தல்

4 0

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. 

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.
சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.
இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் அந்த தாக்குதலில் பலியாகினர்.
இந்நிலையில், ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த  ஆணையிட்டுள்ளது.
இதேபோல், சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

தலீபான், ஹக்கானி பயங்கரவாத குழு தலைவர்களுக்கு பொருளாதார தடை: அமெரிக்கா அறிவிப்பு

Posted by - January 27, 2018 0
பாகிஸ்தானில் இருந்தவாறு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலீபான் மற்றும் ஹக்கானி குழு பயங்கரவாத தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து உள்ளது.

ஆப்கன்: இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீச்சு

Posted by - January 16, 2018 0
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலால் பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்…

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஜப்பான் வீரர் சாதனை வெற்றி

Posted by - August 12, 2016 0
ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

டெல்லியில் 26-வது நாளாக போராட்டம்: 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்

Posted by - April 9, 2017 0
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

வீடு மாறிச் சென்று அப்பாவி வாலிபரை சுட்டுக்கொன்ற போலீஸ்!

Posted by - September 8, 2018 0
அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவரை பெண் காவலர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Leave a comment

Your email address will not be published.