தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்!

8 0

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

நினைவு தினம் நிறைவடைந்த பின்னர் , நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் , ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாக பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்ப மாக உள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால், நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர் சபை உறுப்பினர் வ. பார்த்திபன் நினைவிடத்தினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017 0
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சபை…

ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Posted by - October 30, 2016 0
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கொக்குவில் வைத்து இரண்டு மாணவர்கள்…

இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது- எஸ்.கஜேந்திரன்(காணொளி)

Posted by - February 26, 2018 0
இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இரு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்,மீதமுள்ள 1 வருடத்தினை நிறுத்த வேண்டும் என,…

கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது(காணொளி)

Posted by - February 26, 2017 0
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதுடன் சுமார் மூவாயிரம்…

Leave a comment

Your email address will not be published.