சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம்

337 0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக சமூர்த்தி பிரஜா வங்கி, வலய காரியாலயங்கள் மற்றும் பிரதேச சமூர்த்தி காரியாலயங்கள் என்பன இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை குறைக்காதிருத்தல், ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தல் நியமனக் கடிதங்களை வழங்கல், பதவி உயர்வு முறையை செயற்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை அவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வழமையாக சமூர்த்தி வங்கிகளின் நாளாந்த செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் அதன் சாவிகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் அந்த சாவியைப் பெற்றுக் கொள்வதற்காக எந்த சமூர்த்தி அதிகாரிகளும் வரவில்லை என்று பொலிஸ் நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.

Leave a comment