முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஜேர்மனில் கைது!

9 0

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ புலிகளின் பிடியில் இருந்த இராணுவத்தினரைக் கொல்வதற்கு உதவியதுடன் அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்தார் என்றே குறித்த உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஜெர்மனி சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவிக்கின்றது. பி.சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜேர்மனியின் டுசெல்ட்டோவ் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில் ஜேர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டார். போர்க்குற்றம் இழைத்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பில் அங்கம் வகித்தார் என்ற அடிப்படையிலுமே இவர் கைது செய்யப்பட்டதாக ஜேர்மனி சட்ட மா அதிபர் திணைக்களம் கூறுகின்றது.

2006ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த இவர் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் என்றும் கொலைக் களத்திற்கு இராணுவத்தினர் கொண்டு செல்லப்படுவதற்கு சிவதீபன் பாதுகாப்பு அளித்தமை, கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சிவதீபன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

Related Post

வடபகுதி மீனவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி காட்டுவதில் தவறில்லை- சிவாஜி

Posted by - August 20, 2018 0
யாழ்.வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்  மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கொண்டுள்ளார்கள் என காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்…

20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 15, 2017 0
20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை…

சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரவுள்ள கோட்டா

Posted by - August 16, 2016 0
சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட கடிதத்தை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை

Posted by - March 14, 2017 0
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் முதலாம் இடத்தில் – மது வருமானத்தில்

Posted by - June 27, 2016 0
அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும்…

Leave a comment

Your email address will not be published.