திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு கடற்கரையில் இருந்து இன்று 16 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரல்- பேசின் பாலம் இடையே 5-வது மற்றும் 6-வது ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்காக மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படவில்லை.
அங்கிருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சூலூர்பேட்டை செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் அங்கிருந்து இயக்காமல் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காக மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில் 2 நாட்களுக்கு மட்டும் கடற்கரை நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
கடற்கரையில் இருந்து ஆவடிக்கு 11 ரெயில்களும், திருவள்ளூருக்கு 14 ரெயில்களும், அரக்கோணத்திற்கு 20 ரெயில்களும், திருத்தணி, திருப்பதிக்கு 11 ரெயில்களும், பொன்னேரி, கும்மிடிப்பூண்டிக்கு 16 ரெயில்களும், சூலூர்பேட்டை, நெல்லூருக்கு 12 மின்சார ரெயில்களும் செல்கின்றன. நள்ளிரவு 12.25 மணியில் இருந்து இரவு 11.55 மணி வரை புதிய அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து 84 ரெயில்களும் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் பகுதியில் இருந்து கடற்கரைக்கு 84 ரெயில்களும் விடப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணி, 5.30 மணி, காலை 7.45, 8.50, 10.15, பகல் 1.30, 2.30, 3.40, மாலை 4.15, 5.10, இரவு 7.55, 8.25, 9.20, 9.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்கிறது.
பொன்னேரி, கும்மிடிப் பூண்டிக்கு நள்ளிரவு 12.15, அதிகாலை 6.15, 7.30, 8.20, 9.20, 10.55, 11.40, பகல் 12.15, 2.15, 3 மணி, 3.25, மாலை 4.25, 6.10, 7.40, 9.40, 10.40, 11.20 ஆகிய கால அட்ட வணையில் புறப்பட்டு செல்லும்.
சூலூர்பேட்டை, நெல்லூருக்கு அதிகாலை 4.15, 4.45, 5.45, காலை 7.55 மணி, 8.35 மணி, 10 மணி, பகல் 12.45, 1.40, 2.45, மாலை 5.50, 6.35, இரவு 8.35 மணி நேரங்களில் புறப்பட்டு செல்கிறது.
பொதுமக்கள் புதிய அட்டவணையில் கடற்கரையில் இருந்து இயங்கும் மின்சார ரெயில்களை பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

