மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு

10 0

சிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் (ACF ) மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று (04) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் திரு மகேசு ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஈகைச்சுடரினை மூதூரில் மனிதநேயப் பணியாளர்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
மூதூரில் பட்டினுக்கு எதிரான அமைப்பில் பணியாற்றிய போது படுகொலைசெய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ம.நிதிலன் மூதூரில் இடம் பெற்றது மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மிகப் பெரும் படுகொலை எனத் தெரிவித்ததுடன், அச் சம்பவத்தில் 23 வயது தொடக்கம் 54 வயதுடையவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களின் பெயர் விபரத்தையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா ஆபத்தான சூழல் எனத் தெரிந்தும் மனிதநேயப்பணியாற்றிய போது படுகொலை செய்யப்பட்டவர்கள் இவர்கள். எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தச் செல்லவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க செயலாளர் திரு சச்சி அவர்கள் உரையாற்றும் போது பல இடையூறுகளுக்கு மத்தியிலேயே இந்த நினைவு தூபி அமைக்கப்பட்டதாகவும் மே 18 மற்றும் ஆகஸ் 04 ஆகிய தினங்களில் இவ்விடத்தில் வணக்க நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மூதூரில் மனிதநேயப் பணியார்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன், இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி பானுஜா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

Related Post

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்யவும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 13, 2017 0
October 12 ,2017 Norway நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது…

கனடாவில் காணாமல் போன தமிழர்!

Posted by - July 27, 2017 0
கனடாவின் Stouffville பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார்…

ஹொ ங்கோங் விடயம் – மறுக்கும் இலங்கை காவல்துறை தலைமையகம்

Posted by - February 26, 2017 0
ஹொங்கோங்கில் வசிக்கும் இலங்கைகள் குறித்து தகவல் பெறும் நோக்கில், இலங்கை காவல்துறையினர் மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் ஆகியன மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகம்…

அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”

Posted by - December 21, 2016 0
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே “ஈழத்துத் திறமைகள்” (Tamil Eelam’s…

புத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்

Posted by - January 3, 2019 0
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு  நிகழ்வு!

Leave a comment

Your email address will not be published.