அரச வைத்திய அதிகாரிகள் இன்று முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் எவ்வித நியாயங்களும் அற்றது என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
இது மக்களை தவறாக வழிநடத்தும் சிறிய காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் வேலை நிறுத்தம் என்று அவர் கூறியுள்ளார்.
வைத்தியர்களுக்கு 12 வீதமாக உள்ள வெட் வரியை 24 வீதமாக அதிகரித்தமையை வேலை நிறுத்தத்திற்கு காரணமாக சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அது மாதத்திற்கு 03 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிக வருமானம் ஈட்டுவோருக்குரியது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதத்திற்கு 03 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைந்த வருமானம் பெறும் வைத்தியர்களுக்கு முன்னர் இருந்தது போன்றே நூற்றுக்கு 12 வீத வெட் வரியே அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் தனியார் வைத்தியசாலைகளுக்கு 15 வீத வெட் வரி அறவிடப்படுவதாக மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்ததையடுத்து அந்த வரியை கடந்த மாதம் முதல் முழுமையாக நீக்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையில் அரச வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் மக்களை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட நியாயமான போராட்டம் அல்ல என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

