இந்தியாவுக்கு விலக்கு அளித்தது அமெரிக்கா!

278 0

ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. மேலும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் இதற்கான மசோதா நிறைவேறியது.

ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக ரஷியாவுடன் பிற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது.

ரஷியாவிடம் இருந்து 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.30 ஆயிரத்து 600 கோடி) 5 ‘எஸ்-400 டிரையம்ப்’ வான்பாதுகாப்பு சாதனங்களை  வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்தியா ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்வதற்கு அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை, முட்டுக்கட்டையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியா மீது விதித்து உள்ள பொருளாதார தடை, இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளை (போர் தந்திர கூட்டாளி நாடுகள்) பாதிக்காமல் இருக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 87 ஓட்டுக்களும், எதிராக 10 ஓட்டுக்களும் விழுந்தன. செனட் சபையில் நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Leave a comment