“58 நாடுகள், 29 மாநிலங்கள், 5 லட்சம் தேடல்கள்!”-கருணாநிதி

352 0
 தமிழகத்தில் ஜூலை 29 ம் தேதி இரவு, வெளியில் சென்றிருந்த மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

`இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கில்’ என்ற வசனத்தைத் திரைப்படங்களில் மட்டுமே கேட்ட நமக்கு, நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியுள்ளார் `கருணாநிதி’. தமிழகத்தில் ஜூலை 29 ம் தேதி இரவு, வெளியில் சென்றிருந்த மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். வீட்டிலிருந்த மக்கள் அனைவரும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து செய்தி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. இவை அனைத்துக்கும் ஒரே காரணம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகள்தாம். ஆனால், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கிவிட்டார் கருணாநிதி. அவரைப் பார்க்க மாநிலம் முழுவதுமுள்ள தொண்டர்கள் பலர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

29 ம் தேதி இருந்த பதற்றம் இப்போது இல்லை என்றாலும், தலைவர் எழுந்து வருவார் அவரைப் பார்த்த பிறகுதான் வீடு திரும்புவோம் என்கிறார்கள் உடன் பிறப்புகள். கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளைத் தாண்டிப் பொதுமக்களும் கருணாநிதி நலமாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

கலைஞர் கருணாநிதி

கூகுள் தேடலின் இந்திய அளவிலான சமீபத்திய ட்ரெண்ட்ஸில், `கருணாநிதி’ என்ற பெயர் 5 லட்சத்துக்கும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. அதேபோல `கலைஞர்’ என்ற சொல் 2 லட்சத்துக்கும் மேலாகத் தேடப்படுள்ளது. கருணாநிதி, காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அன்று (ஜூலை 28) 20 ஆயிரத்துக்கும் மேலானோர் `காவேரி ஹாஸ்பிட்டல்’ என்று கூகுளில் தேடியுள்ளனர்.

உலக அளவில் `கலைஞர்’ என்ற சொல் இந்தியாவுக்குப் பின் அதிகம் தேடப்பட்டது தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், ஒமன் மற்றும் சிங்கப்பூர் ஆகியவைதாம். கருணாநிதி என்ற பெயரை மட்டும் 58 நாடுகளில் தேடியுள்ளனர்.

Leave a comment