மாற்றங்களுடன் புதிய முறையே சிறந்தது-நிமல்

239 0

பழைய முறையில் தேர்தல் நடத்துவதை சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹாலி எல சுதந்திரக்கட்சி தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை சீர்செய்து மாகாண சபை தேர்தலையும் தொகுதிவாரி தேர்தல் முறையிலே நடத்த வேண்டும்.

இன்றிருக்கும் தேர்தல் முறையூடாக உண்மையான மக்கள் விருப்பு வெளிவருவதில்லை. இந்த தேர்தல் முறையிலுள்ள தவறுகளை சீர்செய்து மாற்றம் செய்ய வேண்டும்.

கடந்த 4, 5 தசாப்தங்களாக விருப்பு வாக்கு முறையை ஒழித்து தொகுதிவாரி முறையினூாக தொகுதிக்கு பொறுப்பு கூறும் உறுப்பினர் நியமிக்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சி கோரி வருகிறது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment