எதிர்கட்சி தலைவர் பதவியை குமார வெல்கமவிற்கு வழங்க வேண்டும்

205 0
எதிர்கட்சி தலைவர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு வழங்க வேண்டும் என அனைத்திலங்கை உள்ளூராட்சி மன்ற சம்மேளனத்தின் தலைவர் உதேனி அதுகோரல தெரிவித்துள்ளார். 

நேற்று (29) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் பழமையான உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு அந்த பதவி வழங்கங்குவதில் எவ்வித தவறும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில்   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவு செய்யப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment