இராஜதந்திர விடயத்தை தாண்டி மக்கள் நலனே முக்கியம்-சுவாமிநாதன்

196 0

வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தமையானது இராஜதந்திர விவகாரங்களை தாண்டி மக்கள் நலனையே மையப்படுத்தியதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடகிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தினூடாக இருவருட காலத்துக்குள் அப் பகுதி மக்களுக்கு 15 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. அத்துடன் வேலையாள் ஒருவருக்கு சாதாரணமாக 40 ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்க எதிர்பார்த்துள்ளதோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே 13.2 பில்லியன் ரூபா நிதிசார் நன்மைகள் கிடைக்கவுள்ளன.

இத்தகைய திட்டத்திற்கே தற்போது தடைகள் எற்படுத்தப்படுகின்றன. இந்த தடைகளை ஏற்படுத்துபவர்கள் நலன்கள் வேறுபட்டவை. அரசாங்கம் என்ற வகையிலே நாம் மக்களின் நலன்களை மையப்படுத்தியே செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

இதில் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர போட்டிகளை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல. அதற்கான அவசியமும் கிடையாது. ஆகவே கிடைக்கும் வாய்ப்புக்களை தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளால் யாரால் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Leave a comment