அளுத்கமையைப் போன்று கிந்தோட்டை, அம்பாறை பாதிப்புகளுக்கும் நஷ்ட ஈடு வழங்குவோம்- ராஜித

192 0

HAஇனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுமவரை நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம் எனவும், எமது அரசாங்கத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் எந்தவொரு தலைவரும் இனவாதத்துக்கு அடிபணியவில்லையெனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அழிவடைந்த சொத்துக்களை புனரமைத்துக் கொடுப்பது மாத்திரம் போதுமானது அல்ல. அரசியல்வாதிகளாலேயே இந்த வன்முறைகள் உருவாக்கப்பட்டன. அளுத்கம சம்பவத்தில் 2012 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

இன வன்முறைகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. கிந்தோட்டை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் நாம் நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்போம்.

கடந்த அரசாங்கத்தில் கல்வியறிவு அற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளுக்கே எமது அரசாங்கம் தற்பொழுது நஷ்டஈட்டைக் கொடுக்கவேண்டியுள்ளது. சகலருக்கும் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment