கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது – காவேரி மருத்துவமனை அறிக்கை

492 0

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் தீவிர சிகிச்சைக்கு பிறகு சீராக உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கருணாநிதி உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

Leave a comment