இன்று (27) கொழும்பின் சில பகுதிகளுக்கு 6 மணிநேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை மற்றும் மின் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அப்பகுதிகளில் இம்மாதம் எதிர்வரும் 31 ஆம் திகதி, திடீர் மின்சார தடை ஏற்படலாமெனவும் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

