தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு அதி­கா­ரத்தை பகிரக் கூடிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மாகும்!

355 0

தேசிய பிரச்­சினை நாம் நினைக்கும் அள­வுக்கு பயங்­க­ர­மா­னது அல்ல. நினைக்கும் அள­வுக்கும் பூதம் கறுப்­பல்ல. அதனை விளங்­கிக்­கொள்ள வேண்டும் என தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரு­ம­ மொ­ழிகள் அமைச்சின் ஏற்­பாட்டில் “தெரிந்தால் கற்­பி­யுங்கள் தெரி­யா­விட்டால் கற்­றுக்­கொள்­ளுங்கள்”” என்ற 2017 ஆம் ஆண்­டுக்­கான வானொலி நிகழ்ச்­சியின் சிறப்பு பெறு­பே­று­களை பெற்­றுக்­கொண்ட மாணவ,மாண­வி­யரை பாராட்டும் தேசிய வேலைத்­திட்டம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் தமிழும் சிங்­க­ளமும் தேசிய மொழி­க­ளாகும். தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு அதி­கா­ரத்தை பகிரக் கூடிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மாகும். அது கட்­டாயம் அவ­சி­ய­மாகும். அதில் மாற்று கருத்­துக்கு இடம் கிடை­யாது. ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பு வரும். எனினும் நாம் எதிர்­பார்க்கும் வேகத்தில் வராது. அனை­வரும் இணக்­கத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வர வேண்­டி­யுள்­ளது. அதுவே எமது அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும்.

ஆகவே அர­சி­ய­ல­மைப்பு வரும் வரை பார்த்­தி­ருக்­காமல் மொழி ரீதி­யாக இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்தேன்.

மரத்­திற்கு குருவி வரும் வரை பார்த்­தி­ருக்­காமல் கையி­லி­ருக்கும் குரு­வி­யான தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் உள்ள மொழி சம்­பந்­த­மான சட்­டத்தை பயன்­ப­டுத்தி மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்ளேன். மொழியின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினை காண முடியும்.

நாம் நினைப்­பது போன்று தேசிய பிரச்­சினை பயங்­க­ர­மா­னது அல்ல. பயங்­கர பூதம் அல்ல. நாம் நினைக்கும் அள­வுக்கு பூதம் கறுப்­பல்ல. அதனை விளங்­கிக்­கொள்ள வேண்டும். தேசிய பிரச்­சி­னையில் பிர­தான பங்­காக மொழிப் பிரச்­சி­னையை கண்­டு­கொள்ள முடியும். மொழி பிரச்­சினை தீர்க்­கப்­பட்டால் தேசிய பிரச்­சி­னைக்கும் தீர்வு காண முடியும். மொழி அறிவின் ஊடாக மூவின மக்­களும் ஏனைய இனங்­களை புரிந்­துக்­கொண்டால் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது.

மொழி கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு பெரும் பற்­றா­க்குறை நில­வு­கின்­றது. இதன்­கா­ர­ண­மா­கவே வானொலி தொழில்­நுட்­பத்தின் ஊடாக இந்த பாட­நெறி ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஆகவே இந்த பாட­நெ­றியை எதிர்­வரும் காலங்­களில் தொலை­க் காட்­சியில் காணொளி மூல­மாக ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்போது ஆர்வம் மாணவர்கள் மத்தியில் இன்னும் அதிகரிப்பதுடன் அதிகளவிலான மாணவர் களின் பங்களிப்பு கிடைக்கும்.

தற்போது இளைஞர்கள் எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கும் போது மும்மொழியை தேசிய மொழியாககொண்ட நாடாக மாறும் என நம்புகின்றேன்.

Leave a comment