இந்த அரசாங்கம் செய்த ஒரே ஒரு பணி இருக்கிறது- மஹிந்த

328 0

இந்த அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாட்டுக்கு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டுக்கோ, மக்களுக்கோ எதனையும் செய்யாத இந்த அரசாங்கம், தேர்தலுக்கு செல்ல பயப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்திக்கு பதிலளிக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்திக்கு நேரம் வரும்போது உரிய பதிலை வழங்கவுள்ளேன் எனவும் அவர் கூறினார்.

Leave a comment